வாரிசு படத்திற்கு கிடைத்த டிஆர்பி ரேட்டிங்! விஸ்வாசத்தை விட இவ்வளவு குறைவா
வாரிசு
கடந்த பொங்கலுக்கு விஜய் நடிப்பில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலும் குவித்தது.
அதனை தொடர்ந்த கடந்த ஏப்ரல் 14ம் தேதி சன் டிவியில் பிரீமியர் ஆனது. அதிகம் ரசிகர்கள் வாரிசு படத்தை சின்னத்திரையிலும் பார்த்து ரசித்தனர்.
டிஆர்பி ரேட்டிங்
தற்போது வாரிசு படத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. 19.6 புள்ளிகள் பெற்று இருக்கிறது வாரிசு. படத்திற்கு மொத்தம் 15.9 மில்லியன் Impressions கிடைத்து இருக்கிறது.
இது விஸ்வாசம், அண்ணாத்தே, சர்க்கார் போன்ற படங்களை விட மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வாரிசுக்கு டாப் 5 லிஸ்டில் இடம் கிடைக்கவில்லை.
டிஆர்பி சாதனை படைத்த படங்களில் லிஸ்ட்
1. விஸ்வாசம் 18.14M
2. பிச்சைக்காரன் 17.60M
3.அண்ணாத்தே 17.37M
4.சர்க்கார் 16.90M
5. பொன்னியின் செல்வன் 1 - 16.38M