வாரிசு ரிலீஸுக்கு வந்த பெரிய பிரச்சனை! வசூலுக்கு சிக்கல் ஏற்படுத்தும் நடிகர்
வாரிசு
விஜய் ரசிகர்கள் எல்லோரும் வரும் பொங்கலுக்கு தான் காத்திருக்கிறார்கள். வாரிசு படம் ரிலீஸ் ஆவது தான் அதற்கு காரணம்.
பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் போட்டிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதியும் உறுதி செய்வதில் தான் தற்போது பிரச்சனையே.

உதயநிதியால் சிக்கல்?
துணிவு படம் வியாழக்கிழமையான ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது. அதற்க்கு முந்தைய நாள் வாரிசு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது துணிவு படத்தை ரெட் ஜியன்ட் மூலமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி தான் புது சிக்கலை வாரிசுக்கு கொடுத்திருக்கிறாராம்.
வாரிசு வரும் அதே தேதியில் தான் துணிவு படமும் ரிலீஸ் என முடிவெடுத்து இருக்கிறாராம் அவர். முதலில் சோலோவாக ரிலீஸ் ஆகும் படம் வசூல் அள்ளிவிடும் என்பதால் அதற்கு இடம்கொடுக்காமல் இரண்டு படங்களையும் ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய உதயநிதி சொல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் படத்தை வாங்க ரெட் ஜியன்ட் முயற்சி செய்ததும், அது நடக்காக நிலையில் இப்படி சிக்கலை ஏற்படுத்துவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மகேஷ் பாபு போலவே விஜய் ! அப்படியே இருக்கிறதே, வைரலாகி வரும் போட்டோஸ்