குக் வித் கோமாளி 5ல் இன்றைய எலிமினேஷன்.. கண்ணீர் விட்டு அழுது வெளியேறிய போட்டியாளர்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் இன்று 18வது எபிசோடு ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என்பதால் வெளியே போகப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்தது.
போட்டியாளர்கள் எல்லோருக்கும் பிரியாணி செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரியாணி செய்து இருந்தனர். அதில் சுஜிதா சிறப்பாக சமைத்து செஃப் ஆப் த வீக் பரிசை வாங்கினார்.
எலிமிநேஷன்
அதன் பின் சரியாக சமைக்காத அக்ஷய் கமல், பூஜா மற்றும் வசந்த வசி ஆகியோர் எலிமினேஷன் போட்டிக்கு தேர்வு ஆகினர்.
அதில் வசந்த் வாசி சரியாக சமைக்கவில்லை என கூறி அவரை செஃப் தாமு எலிமினேட் செய்தார். அவர் கண்ணீர் விட்டு அழுது குக் வித் கோமாளி வாய்ப்பு பற்றி எமோஷ்னலாக பேசி கண்ணீருடன் வெளியேறி இருக்கிறார்.