எதிர்பார்த்த வசூல் வரவில்லையா? 7 நாட்களில் வீரன் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா
வீரன் படம்
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீரன். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார்.
இவர் இயக்கத்தில் ஏற்கனவே மரகத நாணயம் எனும் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஆதிரா, சசி, வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
7 நாட்கள் வசூல்
இந்நிலையில், இப்படம் வெளியாகி 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ஆனால், இதை விட அதிக வசூலை தான் படக்குழு எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் வீரன் படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்று.
உடல் எடை அதிகமாக சீரியல் நடிகை கேப்ரியல்லா என்னென்ன உணவு சாப்பிடுகிறார் தெரியுமா?

ஒரு சார்ஜில் 165 கிமீ தூரம் செல்லும் - Jindal Mobilitric R40 மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
