வீட்ல விசேஷம் படம் செய்த இதுவரையிலான வசூல்- ஹிட் லிஸ்டில் இணைந்ததா?
ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின் ஹீரோவாக ஒரு படத்தில் கூட கலக்கினார், அப்படியே இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.
மூக்குத்தி அம்மன் என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் தான் வீட்ல விசேஷம்.
ஊர்வசி, சத்யராஜ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் கடந்த ஜுன் 17ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
மக்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுக்க படக்குழுவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை ஹிட் ஆக்கியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் படம் இதுவரை மொத்தமாக ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் லிஸ்டில் அமைந்துள்ளது.
முதன்முதலாக சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் புகழ் ஜுலி- எந்த தொடர் தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
