வெந்து தணிந்தது காடு, படத்தின் முதல் நாள் வசூலுக்கு வணக்கத்த போடு.. இத்தனை கோடியா
வெந்து தணிந்தது காடு
கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிலம்பரசன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு 1. இப்படத்தில் ராதிகா, சித்தி இதானி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் முதல் ஷோவில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூல் ரீதியாகவும் முதல் நாளை அமோகமாக கடந்துள்ளது.
முதல் நாள் தமிழக வசூல்
ஆம், வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் சுமார் ரூ. 8 முதல் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும், சென்னையில் மட்டுமே ரூ. 95 லட்சம் வரை வசூல் செய்து சிறந்த ஓப்பனிங்கை பெற்றுள்ளது. கூல் சுரேஷ் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் வெந்து தணிந்தது காடு, படத்தின் முதல் நாள் வசூலுக்கு வணக்கத்த போடு..