மங்காத்தா 2 திரைப்படம் குறித்து விஜய் - அஜித்திடம் பேசினாரா வெங்கட் பிரபு !

By Jeeva May 05, 2022 01:40 PM GMT
Report

மங்காத்தா 2 குறித்து வெங்கட் பிரபு சொன்ன விஷயம்  

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார், இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருகிறது.

மேலும் இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா, அஜித்தின் 50-வது திரைப்படமாக வெளியான மங்காத்தா பிளாக் பஸ்டர்வெற்றியடைந்தது.

சமீபத்தில் வெங்கட் பிரபு கலந்து கொண்ட கல்லூரி விழாவில் மங்காத்தா 2 கதையுடன் அஜித் - விஜய்யை நடிக்க வைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். அவர் சொன்ன விஷயம் அப்போதிலிருந்து பெரியளவில் பேசப்பட்டு வருவதை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள வெங்கட் பிரபு "சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் 'மங்காத்தா 2' பற்றி என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதில் அஜித் மற்றும் விஜய் முக்கிய வேடங்களில் நடிக்கும் யோசனை என்னிடம் இருப்பதாக நான் நீண்ட காலமாக எனது பேட்டிகளில் சொல்லி வந்தேன்.

ஆனால் நான் இன்னும் 'மங்காத்தா 2' படத்தின் ஸ்கிரிப்ட் வேலை செய்யவில்லை அல்லது படம் தொடர்பாக அஜித் சார் அல்லது விஜய் சாரை தொடர்பு கொள்ளவில்லை. இரண்டு நட்சத்திரங்களையும் ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்களின் விருப்பம், அவர்களின் கனவை நான் ஒருபோதும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை" பேசியுள்ளார்.  

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து விஜய் - அஜித்திடம் பேசினாரா வெங்கட் பிரபு ! | Venkat Prabu About Mankatha 2 Idea

AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் 43 வயது நடிகை ! யார் தெரியுமா?


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US