வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா !
இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நாக சைதன்யாவின் திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே இன்று இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி ஷேட்டி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தற்போது இப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வெங்கட் பிரபுவின் பதிவில் “கனவு நினைவானது, முதல்முறையாக எனது பெரியப்பா மற்றும் எனது சகோதரர் யுவனுடன் பணிபுரிய உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
A dream come true moment for me!! Joining hands with my uncle (periyappa) #isaignani @ilaiyaraaja for the first time along with my brother @thisisysr for #NC22 #VP11 pic.twitter.com/OVzZS03T8B
— venkat prabhu (@vp_offl) June 23, 2022
குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சூர்யா-ஜோதிகா- அவரது மகள் தியா செய்த செயல், செம வீடியோ