90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம்

Report

வெண்ணிற ஆடை மூர்த்தி

நம்மை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த திரை பிரபலங்களில் ஒருவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் எம்ஜிஆர் - சிவாஜி காலம்தொட்டு ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் | Vennira Aadai Moorthy Healthy Life At Age 90

கடந்த 1965-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கினார். விரைவில் 90 வயதை தொட உள்ளார். தனது சிறு வயதில் இருந்தே எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யாத நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, இந்த முதுமையில் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதில் ஒரு ரகசியம் உள்ளது. அதை பற்றி தெரிந்துகொள்ள, இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் | Vennira Aadai Moorthy Healthy Life At Age 90

Backrooms: திரை விமர்சனம்

Backrooms: திரை விமர்சனம்

90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் எப்படி தன்னுடைய தள்ளாடும் வயதிலும் ஆரோக்கியத்தோடு இருக்கிறார் தெரியுமா? அதற்கு காரணம், அவருடைய பழக்கவழக்கங்கள் தான். என்னதான் சிறு வயதில் இருந்து உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்தாலும், நேர ஒழுக்கத்திலும், உணவு ஒழுக்கத்திலும் மற்றும் தூக்க ஒழுக்கத்திலும் தான் மிகவும் கண்டிப்புடன் (strict) ஆக இருப்பாராம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

ஆரோக்கியத்தின் ரகசியம்

"சிறுவயதில் விளையாடக்கூட மாட்டேன் அந்த அளவுக்குத்தான் என் உடலுழைப்பு இருந்தது. எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதே பிடிக்காது. இன்று வரை நான் முற்றிலும் சைவ உணவே உண்பவன். அதுவும் காலையில் இட்லி, மதியம் பாரம்பரிய சாம்பார், ரசம் சாதம்தான் எனக்கு மிகவும் பிடித்த உணவு. இரவில் சப்பாத்தி சாப்பிடுவேன். ஆடம்பர உணவுகள் (Fancy foods) எதுவும் சாப்பிடவே முடியாது. முற்றிலும் தவிர்த்து விடுவேன். இப்போதெல்லாம் சாப்பாட்டின் அளவுகூட குறைந்துவிட்டது" என கூறினார்.

90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் | Vennira Aadai Moorthy Healthy Life At Age 90

உணவு விஷயத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட, அதை எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் அதிக கவனம் கொண்டவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. அந்த வகையில் இரவு 9.30 மணிக்கு ஷார்ப்பாக சாப்பிடும் பழக்கம் கொண்ட அவர், சாப்பிட்ட உடன் படுக்க செல்லாமல் ஒரு மணி நேரம் வரை டிவி பார்ப்பது மற்றும் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவாராம். முதுமை காரணமாக உணவின் அளவு குறைவது, ஞாபக மறதி பிரச்சனை போன்றவை இருப்பதால் இப்போதெல்லாம் மகன் மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் நடைப்பயிற்சி செய்கிறாராம்.

90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் | Vennira Aadai Moorthy Healthy Life At Age 90

இப்படி நேரத்துக்கு சாப்பிடுவது, அதுவும் தன உடலுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுவது, சாப்பிட்ட பின் ஆரோக்கிய உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுவது என்றெல்லாம் இருப்பதுதான் வெண்ணிற ஆடை மூர்த்தியின் இத்தனை வருட ஆரோக்கியத்திற்கு காரணமாம். சிறு வயதிலிருந்தே இவற்றையெல்லாம் அவர் பின்பற்றியதால்தான் முதுமையில் அவரால் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US