கெட்டி மேளம் சீரியலில் வெற்றி-துளசிக்கு அதிரடியாக நடந்த திருமணம்.. பரபரப்பான எபிசோட்
கெட்டி மேளம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் கெட்டி மேளம்.
இந்த தொடரில் இப்போது பரபரப்பான திருமண காட்சி இடம்பெற்றுள்ளது.
எபிசோட்
வெற்றி, துளசி கழுத்தில் தாலி கட்டுவதற்காக தயார் ஆகிறார். தியாவை தூங்க வைத்துவிட்டு அப்படியே துளசியும் தூங்குகிறாள்.
அப்போது யாருக்கும் தெரியாமல் அவளது கழுத்தில் தாலி கட்டுகிறான் வெற்றி. அதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓட, அவனை ரேவதியின் அம்மா புவனா பிடித்து விடுகிறார்,
அவரிடம் இருந்தும் வெற்றி தப்பித்து விடுகிறார். மறுநாள் காலையில் துளசி கண்விழித்து துணியை மடிக்கும்போது தன்னுடைய கழுத்தில் தாலி தொங்குவதை பார்க்கிறாள்.
இதனால் அதிர்ச்சியும் அவள், இந்த தாலி எப்படி தனது கழுத்தில் வந்தது என புரியாமல் பதறுறாள். தற்போது வெற்றி-துளசி பரபரப்பான திருமண காட்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இதோ போட்டோ,

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
