ரோஹினி சினிமாஸில் படம் பார்க்க அனுமதிக்கப்படாத சம்பவம்- வெற்றிமாறன் கண்டனம்
ரோஹினி சினிமாஸ்
நேற்று தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் பார்க்க சிலர் ரோஹினி திரையரங்கிற்கு வந்துள்ளனர், அவர்கள் டிக்கெட் வாங்கியும் திரையரங்கிற்கு உள்ளே படம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
அந்த சம்பவத்தை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட வைரலானது, பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.
அதன்பிறகு அந்த மக்கள் திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.
வெற்றிமாறன் கண்டனம்
இதுகுறித்து வெற்றிமாறன் தனது சமூக வலைதளங்களில், 100 ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம்.
ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு.
எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தனது அம்மாவுடன் சூப்பர் சிங்கர் புகழ் தினேஷ் முதல் விமான பயணம்- எமோஷ்னலான அழகான வீடியோ