தெலுங்கு டாப் ஹீரோவை இயக்கும் வெற்றிமாறன்? அடுத்து யாரும் எதிர்பார்க்காத காம்போ
அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக மாறிருப்பவர் வெற்றிமாறன். இவர் தற்போது ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து விடுதலை என்ற படத்தை உருவாக்கியுள்ளார் .
இதில் சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி போன்ற நடச்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதையடுத்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க போகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்பார்க்காத காம்போ
இந்நிலையில் வெற்றிமாறன், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டீ.ஆரிடம் மூன்று கதை கூறியதாகவும், அதற்கு ஜூனியர் என்.டீ.ஆர் ஓகே சொல்லியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த கதைகளை இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஜூனியர் என்.டீ.ஆர் லீட் ரோலில் நடிக்க போவதாவும், இரண்டாம் பக்கத்தில் நடிகர் தனுஷ் லீட் ரோலில் நடிப்பாராம்.
ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

முன்னாள் கணவரின் தம்பிகாக சமந்தா செய்த விஷயம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா