வெற்றிமாறன் இயக்கத்தில் ஒன்றாக இணையும் இரு டாப் நடிகர்கள்.. யார்யார் தெரியுமா
வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த மாதம் வெளியாகிறது.
விடுதலை படத்திற்கு பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெற்றிமாறன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது.
செம மாஸ் அப்டேட்
அதன்படி, வாடிவாசல் படத்தை முடித்த பின் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாராம்.
தனுஷுடன் இணைந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.
நடிகையை தாக்கி காயப்படுத்திய முன்னாள் காதலர்.. புகைப்படம் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி