பா. ரஞ்சித் படத்திற்காக ஆளே மாறிய கெத்து தினேஷ்.. வெளிவந்த புகைப்படம் இதோ
வேட்டுவம்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தங்களான். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் வேட்டுவம்.

இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து வருகிறது. இப்படத்தில் கெத்து தினேஷ் ஹீரோவாக நடிக்க ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகை சோபிதா துளிபாளா இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

கெத்து தினேஷ்
இதில் படத்தில் வேலைபார்த்து வரும் நபர், நடிகர் தினேஷ் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் வெளிவந்த நிலையில், அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஆளே மாறியுள்ளார் நடிகர் தினேஷ். ஆம், அந்த அளவிற்கு இப்படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்..

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri