பிக் பாஸ் 7 வீட்டின் முதல் மோதல்.. கடுப்பான விசித்திரா.. அதிரடி வீடியோ இதோ
இரண்டாம் நாள்
பிக் பாஸ் 7ல் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக் பாஸ் ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளை அமைத்து, இந்த வார தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதல் நாள் எந்த ஒரு சண்டையும், வாக்குவாதமும் இல்லாமல் முடிந்த நிலையில், இரண்டாவது நாள் வாக்குவாதம், விதிமுறை மீறல் நடந்துள்ளது. ஆம், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைக்க கூடாது என விதிமுறை பிக் பாஸால் அறிவிக்கப்பட்டது.
முதல் ப்ரோமோ
ஆனால், அதை மீறி விசித்திரா மற்றும் யுகேந்திரன் இருவரும் சமைக்க உதவி செய்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லும்படி பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வதால், ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து நாமினேட் ஆகாத இருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புங்கள் என பிரதீப் கேட்கிறார்.
இதனால் கடுப்பான விசித்திரா, ஏன் அங்கிருந்து இங்கு இருவரை கேட்குறீர்கள் என கேள்வி எழுப்புகிறார். நீங்க இரண்டு பேர் அங்கு போறீங்க, இங்கு எங்களுக்கு கடன் அடைக்க இரண்டு பேர் வேண்டும் அதற்காக தான் என பிரதீப் கூறுகிறார்.
இதன்பின், எங்க இருவரின் அளவிற்கு இணையாக போட்டியிட அங்கு யாரவது இருக்கிறார்களா என விசித்திரா சொல்ல வீட்டின் தலைவர் விஜய், பிரதீப்பை பார்த்து நீங்க பேசுறது எதாவது புரியுதா என கேட்கிறார். இந்த வாக்குவாதம் எதில் போய் முடியப்போகிறது என்பதை இன்றை எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ..
#Day2 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 3, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV" pic.twitter.com/ewKNDR7zUM