குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் பாதியில் வெளியேறிய போட்டியாளர்! என்ன நடந்தது?
குக் வித் கோமாளி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது நான்காம் வாரத்தை தொட்டு இருக்கிறது. கடந்த வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் immunity band பெறுவதற்கான போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கம் போல கோமாளிகள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் என எல்லோரும் ஷோவுக்கு வந்த நிலையில் ஒரு போட்டியாளர் திடீரென பாதியில் வெளியேறினார்.
விசித்ரா
நடிகை விசித்ரா தான் பாதியில் வெளியேறினார். அவரது குடும்பத்தில் எமெர்ஜன்சி என சொல்லி அழைப்பு வந்ததால் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.
அவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க தான் விசித்ரா சென்று இருக்கிறார்.
ஒரு படத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்ட எஸ்.ஜே. சூர்யா.. இப்படியொரு நிலைமையா