தமிழகத்தில் 10 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கிங் ஆஃப் ஓப்பனிங் என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலை வாரிக்குவித்துக்கொண்டிருக்கும் படம்தான் விடாமுயற்சி.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் இருவரும் இப்படத்தில் அஜித்துடன் பல வருடங்கள் கழித்து நடித்திருந்தனர்.
மேலும் ரெஜினா மற்றும் ஆராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். மக்களால் கொண்டாடப்பட்டு வரும் விடாமுயற்சி திரைப்படம் உலகளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 89 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.