விடாமுயற்சி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ்.. 13 வருடங்களுக்கு பின் இப்படி செய்கிறாரா அஜித்
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் என்றும், அதில் ஒரு கதாநாயகியாக திரிஷா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
காத்திருக்கும் சர்ப்ரைஸ்
இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அசல் படத்திற்கு பின் விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தாவிற்கு இப்படியொரு பயம் இருக்கிறதா? இதை மட்டும் செய்யவே மாட்டாராம்