விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ் திருமேனி - நடிகர் அஜித் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து ட்ரைலர் வெளிவந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், வெளிநாட்டில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. இதுவரை ரூ. 4 லட்சத்திற்கும் மேல் வசூல் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.