சன் டிவியில் ஒளிபரப்பாகும் விடாமுயற்சி படம்.. எப்போது தெரியுமா
விடாமுயற்சி
அஜித் - த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் இவர்கள் இருவரும் பல ஆண்டுகள் கழித்து இப்படத்தில் நடித்திருந்தனர்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

விடாமுயற்சியை விட 10 மடங்கு அதிகமாக அஜித்தின் குட் பேட் அக்லியில் அது இருக்கும்... பிரபலம் ஓபன் டாக்
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 131 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
சன் டிவியில் விடாமுயற்சி
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி குறித்து இப்போதே தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று விடாமுயற்சி படம் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu