ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டும் அஜித், விடாமுயற்சி ஓவர்சீஸ் புக்கிங்.... செம கலெக்ஷன் பா..
விடாமுயற்சி
நடிகர் அஜித், சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தில் ஜெயிக்க களமிறங்கியுள்ளார்.
கார் ரேஸ், துபாயில் நடந்த போட்டியில் பல வருட் இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய அஜித் 3வது இடத்தை பிடித்து ஜெயித்தார். அடுத்தடுத்து நடக்கப்போகும் போட்டியில் கலந்துகொள்ள தீவிர பயிற்சி எடுக்கிறார்.
தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ
ரேஸில் ஒருபக்கம் அவர் கலக்க இன்னொரு பக்கம் திரையரங்குளை தெறிக்கவிட விடாமுயற்சி ரிலீஸ் வேலைகள் மாஸாக நடக்கிறது.
துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆவலாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இன்னும் சில நாட்களில் செம விருந்து தான்.
ப்ரீ புக்கிங்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மொத்தமாக 3650 திரைகளுக்கு மேல் விடாமுயற்சி ஒளிபரப்பாக உள்ளதாம். மலேசியாவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்திருந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் North Americaவில் படம் இந்திய மதிப்பில் ரூ. 2.1 கோடி வரை ப்ரீ புக்கிங் கலெக்ஷன் செய்துள்ளது.