படப்பிடிப்பிற்காக அஜித்தின் விடாமுயற்சி டீம் எடுத்துள்ள அதிரடி முடிவு- என்ன இப்படி ஆனது?
விடாமுயற்சி
துணிவு படத்தை முடித்தத கையோடு அஜித் தனது படத்தை இயக்க யாருக்கு வாய்ப்பு கொடுக்க போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
பின் லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62வது படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது, ஆனால் இடையில் சில காரணங்களால் இருவரின் கூட்டணி அமையாமல் போனது.
அவருக்கு பிறகு அஜித் மகிழ்திருமேனியின் கதையை ஓகே செய்ய தற்போது விடாமுயற்சி என்ற பெயரில் அஜித்தின் 62வது படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
அங்கு பிரபலங்கள், ரசிகர்களுடன் அஜித் எடுக்கும் புகைப்படங்கள் அதிகம் வெளியாகிய வண்ணம் உள்ளன.

படப்பிடிப்பு தகவல்
இதுவரை முடிந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜானில் தான் எடுக்கப்பட்டது.
மீதமிருக்கும் பகுதிகளையும் வெளிநாடுகளில் ஷூட் செய்ய மகிழ் திருமேனி பிளான் செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி டீம் அஜர்பைஜான் நாட்டில் இருந்து சென்னை திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் பிரச்சினை காரணமாக தான் விடாமுயற்சி டீம் சென்னை திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. மும்பை அல்லது சென்னை பகுதியில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்த பிளான் செய்யப்பட்டுளளதாம்.

மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan