விடாமுயற்சிக்கு வந்த விடிவுகாலம்!.. வதந்திகளுக்கு படக்குழு வைத்த முற்றுப்புள்ளி
விடாமுயற்சி
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டனர்.
இதையடுத்து விடாமுயற்சி படம் குறித்து எந்த அப்டேட்களும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
முற்றுப்புள்ளி
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அஜித் மீண்டும் வேர்ல்ட் டூர் செல்கிறார் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஆகஸ்ட் 18 -ம் தேதி தொடங்கும் என்றும் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அரங்கில் அசம்பாவிதம்!.விபத்தில் ஊழியருக்கு படுகாயம்