சூப்பர் சிங்கர் பிரபலங்களுடன் பாடல் பாடி அசத்தும் வித்யாசாகரின் மகன்.. வைரல் வீடியோஸ்
வித்யாசாகர்
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். இவர் இசையமைத்த கில்லி, சந்திரமுகி, ரன், அன்பே சிவம், இயற்கை ஆகிய படங்கள் இன்று வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் வித்யாசாகரின் பின்னணி இசை காலத்திற்கும் நின்று பேசும்.

அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் பல கோடி நெஞ்சங்களை கட்டிபோட்டுள்ளார். சமீபத்தில் கூட இவர் நடத்திய கச்சேரி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
சூப்பர் சிங்கர் பிரபலங்களுடன் விதயசாகரின் மகன்
இந்நிலையில், இசையமைப்பாளர் விதயசாகரின் மகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் பெயர் ஹர்ஷா வரத்தான்.

இவரும் தனது தந்தையை போலவே இசையில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் மேடையில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்து தனது தந்தை வித்யாசாகர் பாடிய பாடலை பாடி அசத்தினார்.
அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சிவாங்கி, மானசி போன்றவர்களுடன் இணைந்து பாடல்களின் கவர் வெர்ஷன் கூட செய்து வருகிறார்.
குட் நைட் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri