விடுதலை 2 ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்ததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.
ரிலீஸ்
இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விடுதலை 2 திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரும் என கூறுகின்றனர்.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. ஆனால் படக்குழுவிடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
