என் முதல் காதலன் என்னை மோசம் செய்துவிட்டார்!! கசப்பான அனுபவத்தை சொன்ன வித்யா பாலன்..
வித்யா பாலன்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை வித்யா பாலன். இவர் 2005-ம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் அறிமுகமானவர்.
வித்யா பாலன் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் தான் அதிகம் பிரபலமடைந்தார்.
இவர் தமிழில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கசப்பான அனுபவம்
இந்நிலையில் வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் ஏமாற்றப்பட்டேன். என்னுடைய முதல் காதலன் என்னை ஏமாற்றிவிட்டான்.
நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன்.அவர் காதலர் தினம் அன்று என்னிடம் வந்து முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினார். அந்த சமயத்தில் நான் நொறுங்கிவிட்டேன்.
அதன் பின்னர் நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது வாழ்க்கையில் சிறப்பான நிலையில் இருக்கிறேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri