திருமணத்தின் போது விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்- முதன்முறையாக வெளியானது
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். போடா போடி என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இவருக்கு அடுத்தடுத்து எல்லாமே வெற்றி தான்.
நயன்தாராவுடன் திருமணம்
இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்க அங்கே இருந்து அவரது சொந்த வாழ்க்கையும் தொடங்கியுள்ளது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் நீண்ட வருட காதலுக்கு பிறகு கடந்த ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.
அவர்களின் திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிய வண்ணம் உள்ளன.
ஸ்பெஷல் புகைப்படம்
அவ்வப்போது திருமணத்தில் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன் நேற்று மிகவும் அழகான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் திருமணத்தின் போது தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்- குடும்பத்துடன் அவர் எடுத்த அழகிய புகைப்படம்