அவமானம், தோல்வி.. அஜித்தை மறைமுகமாக தாக்கிய விக்னேஷ் சிவன்
சிம்பு நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான "போடா போடி" படத்தின் மூலம் இயக்குனராக விக்னேஷ் சிவன் அறிமுகமானார். இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் வந்ததால் தோல்வி அடைந்தது.
இதையடுத்து இவர் விஜய் சேதுபதியை வைத்து "நானும் ரெளடி தான்" என்ற படத்தை இயக்கி மாஸ் ஹிட் கொடுத்தார்.
அடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62ம் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு காரணம் விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடிக்காததால் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

விக்னேஷ் சிவனின் பதிவு
இந்நிலையில் விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி"
"வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.
Ak 62வில் இருந்து விலகியதால் தான் விக்னேஷ் சிவன் இது போன்று மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.
விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? வெளியான விவரம்
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan