விக்னேஷ் சிவன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை! பெரியப்பாவே போலீசில் கொடுத்த புகார்
விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். அவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார்.
அதன் பின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படம் இயக்க போவதாக செய்தி வெளியானது.
சொத்து பிரச்சனை
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுக்கு மேலும் ஒரு பிரச்சனை தற்போது வந்திருக்கிறது. அவரது அப்பா சிவக்கொழுந்து திருச்சி லால்குடி பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர் இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் பங்கு பூர்வீக சொத்தை விக்னேஷ் சிவனின் அப்பா மட்டும் ஏமாற்றி விற்றுவிட்டார் என தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. இது பற்றி விக்னேஷ் சிவனின் பெரியப்பா போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
மற்ற 8 பேருக்கும் பங்கு இருக்கிறது என நீதிமன்றமே சொல்கிறது. இதில் விக்னேஷ் சிவன் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என அவரது பெரியப்பா பேட்டி அளித்திருக்கிறார்.
56 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை நதியாவின் Beauty Secret என்ன தெரியுமா?- இதுதானா