நயன்தாரா அளவுக்கு சம்பளத்தை கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்.. எத்தனை கோடி தெரியுமா
AK 62
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் AK 62 படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாருக்கிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும், திரைவட்டாரங்களில் உறுதியாக இதுவே பேசப்படுகிறது.
இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் குமாருக்கு, சுமார் ரூ. 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், நயன்தாராவிற்கு ரூ. 10 கோடி சம்பளம் என்றும் தெரிவித்திருந்தனர்.
விக்னேஷ் சிவன் சம்பளம்

இந்நிலையில், AK 62 படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
TRP ரேட்டிங்கில் கயல், பாக்கியலட்சுமி முதல் இடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?