அஜித் படத்தின் சூப்பர் புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்- வைரலாக்கும் ரசிகர்கள்
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருபவர். இவரது இயக்கத்தில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
படம் ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் அப்பட வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அஜித்துடன் அடுத்த படம்
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், படத்திற்கு இசை அனிருத் செய்திருக்கிறார்.
ஏற்கெனவே பட பாடல்கள் வெளியாகி செம ஹிட், சில டீஸர்களும் வெளியாகிவிட்டது.
இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அஜித்தின் 62வது படத்தை இயக்க இருக்கிறார், மற்றபடி படம் குறித்து எந்த தகவலும் இல்லை.
அஜித்தின் ஃபஸ்ட் லுக்
தனது படத்தை தாண்டி மற்ற கலைஞர்களின் பணியையும் பாராட்டும் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் உருவாக்கிய அஜித்தின் 61வது பட ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை ஷேர் செய்து பயர் என கமெண்ட் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களை ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து டிரண்ட் ஆக்கி வருகிறார்கள்.
பாரதி முன்பே வெண்பாவிற்கு ஏற்படும் சோதனை, குஷியில் கண்ணம்மா- பாரதி கண்ணம்மா சீரியலின் அதிரடி புரொமோ

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu
