லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அறுவறுப்பான செயல்- ஆவேசப்பட்ட விக்னேஷ் சிவன் உறவினர்
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜுன் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
திருமண புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு திருப்பதி கோவில் சென்ற அவர்கள் சர்ச்சையில் சிக்கினார்கள், இப்போது குழந்தை பெற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள்.
விக்னேஷ் சிவன் உறவினர்
விக்னேஷ் சிவனின் பெரியப்பா இவர்கள் வாடகை தாள் மூலம் குழந்தை பெற்றது குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ஜோதிகா, சினேகா எல்லாம் இல்லை, திருமணத்திற்கு பின் நெருக்கமாக புகைப்படங்கள் வெளியிடுவது அறுவறுப்பாக உள்ளது.
என்ன தான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இதெல்லாம் சுத்தமான குற்றம். பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கிறார்கள். இந்த விஷயத்தால் என்னால் வெளியே போக முடியவில்லை, அனைவரும் இதைப்பற்றியே கேட்கிறார்கள் என பேசியுள்ளார்.
கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரது அம்மா இவர்தானா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
