சூப்பர் ஸ்டார் அல்லது இளைய தளபதி விஜய்யின் மிகவும் பிடித்த தலைப்பு எது தெரியுமா?
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் 1984ம் ஆண்டு முதல் பிரபலத்தின் மகனா நுழைந்து இப்போது தனக்கென்று தனி சாம்ராஜ்ஜியத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அவர் சாதாரணமாக பெறவில்லை.
அதற்கு பின் கடின உழைப்பு, பல கஷ்டங்கள், மோசமான விமர்சனங்கள் என நிறைய இருக்கிறது. இப்போது இந்திய சினிமாவே கொண்டாடும் இளைய தளபதியாக ஜொலித்து வருகிறார். தளபதி ரசிகர்கள் அவரது வாரிசு திரைப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் தீபாவளி வெளியாகும் என்கின்றனர்.
பிடித்த பட்டப்பெயர்
விஜய் டுவிட்டரில் இருக்கிறார், ஆனால் எப்போதும் ஆக்டீவாக இல்லை. பட ஃபஸ்ட் லுக் வெளியிடுவது போன்ற விஷயங்களுக்கு மட்டும் இப்போது பயன்படுத்துகிறார்.
கத்தி பட ரிலீஸ் சமயத்தில் தான் விஜய் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் சூப்பர் ஸ்டார் அல்லது இளைய தளபதி உங்களுக்கு பிடித்த தலைப்பு எது என கேட்டனர்.
அதற்கு அவர், நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னைப் பிடித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். நான் எதிர்ப்பார்த்ததை விட மேலாகவே உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது.
உங்கள் அன்பிற்கு முன்னால் எனக்கு எந்தவொரு தலைப்பும் பெரிதாகத் தெரியவில்லை என டுவிட் செய்திருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் வந்த கடை எங்கே இருக்கிறது தெரியுமா?- நிஜ பெயர் இதுவா?