வாரிசு ஷூட்டிங் முடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆன விஜய்: குஷ்பூ பேட்டி
வாரிசு
விஜய்யின் வாரிசு படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. நாளை வாரிசு திரைக்கு வரும் நிலையில் படத்தின் இயக்குனர் வம்சி அளித்திருக்கும் பேட்டியில் 'ட்ரைலரில் பார்த்ததைவிட இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் படத்தில் இருக்கிறது' என தெரிவித்து இருக்கிறார்.
வாரிசு குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அதிக செண்டிமெண்ட் உடன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன விஜய்
இந்நிலையில் நடிகை குஷ்பூ சினிஉலகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் வாரிசு கிளைமாக்ஸ் ஷூட்டிங் பற்றி பேசி இருக்கிறார்.
அன்று 103 டிகிரி ஜுரம் அவருக்கு இருந்தது. ஆனால் மற்ற நடிகர்கள் எல்லோரும் வரும் காட்சி என்பதால் அவர் தொடர்ந்து நடித்தார். அருகில் இருக்கும் garageல் தரையில் பெட்ஷீட் விரித்து அதில் படுத்து கொண்டிருந்தார். அவரை அழைக்கும்போது அங்கிருந்து வந்து நடித்தார்.
"ஷூட்டிங் முடித்தபிறகு விஜய் நேராக ஹாஸ்பிடலில் சென்று அட்மிட் ஆகிவிட்டார்" என குஷ்பூ கூறி இருக்கிறார்.
குஷ்பூவின் முழு பேட்டி இதோ
இதனால் தான் நீங்க தளபதி.. விஜய் பற்றி பேசிய ஷாருக்கான்