இளம் இயக்குனர்களுக்கு நடிகர் விஜய் கொடுத்த அட்வைஸ்!
விஜய்
நடிகர் விஜய் தான் தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவரது சம்பளம் நூறு கோடியை தாண்டிவிட்டது. அவரது படங்கள் நெகடிவ் விமர்சனம் வந்தாலும் குறிப்பிடத்தக்க வசூல் பெறுகின்றன. இருப்பினும் படத்திற்கு படம் வெற்றி தோல்வி என அனைத்தையும் அவர் பாடமாகவே எடுத்துகொண்டு பல விஷயங்களை செய்து வருகிறார்.
இதுவரை மாஸ் ஹீரோ கதைகளில் நடித்து வந்த அவர் தற்போது குடும்பத்திற்கு முக்கியதுவம் தரும் வகையில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கும் இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அனேகமாக படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இயக்குனர்களுக்கு அட்வைஸ்
விஜய் ஒருமுறை இயக்குனர்களுக்கு கொடுத்த அட்வைஸ் பற்றிய விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது. எந்த படமாக இருந்தாலும் மூன்று மணி நேரம் இருந்தால் நிச்சயம் போர் அடிக்கும், அதனால் அதிகபட்சம் 2.5 மணி நேரம் இருந்தால் போதும் என அவர் சொன்னாராம்.
சமீபகாலமாக தோல்வியை தழுவிய பல படங்கள் ரன்டைம் அதிகமாக இருந்ததற்காக விமர்சிக்கப்பட்டன என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

திவ்யபாரதி மாலத்தீவில் அப்படி ஒரு கிளாமர் உடையில் எடுத்த வீடியோ! இணையத்தில் படுவைரல்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri