பத்து வருடங்களாக விஜய் பேட்டி அளிக்காமல் இருந்ததற்கு காரணம் ! நேருக்கு நேர் பேட்டியின் புதிய ப்ரோமோ..
எதிர்பார்ப்பில் பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவர் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
அதன்படி சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் 30 மில்லியனுக்கும் அதிகமாக பார்வைகளை குவித்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது பீஸ்ட் படத்தின் வெளியீட்டை தான் எதிர்நோக்கி உள்ளனர், இப்படம் ரசிகர்களிடம் எந்தளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய் சொல்லும் அறிவுரை
இதனிடையே தளபதி விஜய் பத்து வருடங்கள் கழித்து சன் டிவி தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். நெல்சன் விஜய்யை பேட்டி எடுத்துள்ள அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தினமும் வெளியாகி வருகிறது.
அதன்படி இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் நெல்சன் பத்து வருடங்களாக ஊடகங்களை சந்திக்காமல் இருந்ததற்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என கேட்டுள்ளார். அதற்கு விஜய் "ஒரு சம்பவம் ஒன்று நடந்து பத்து வருடங்களுக்கு முன்பு.
மேலும் நெல்சன் "ரசிகர்களுக்கு நீங்கள் எதாவது சொல்லனும் அப்படி எதாச்சி இருக்கா" என கேட்டுள்ளார். அதற்கு விஜய் "அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல அப்படி சொல்லி நான் எஸ்கேப் ஆக விரும்பவில்லை" என கூறியுள்ளார்.
Rasigargalukku naan enna solla virumburen-na...
— Sun TV (@SunTV) April 5, 2022
-@actorvijay
Vijay-yudan Nerukku Ner | April 10 | 9 PM @Nelsondilpkumar #SunTV #VijayyudanNerukkuNer #VNNOnSunTV #ActorVijay #BeastSpecial #Beast pic.twitter.com/LQfDUsexni
விஜய்யின் 66வது படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- இவரும் இருக்கிறாரா?