விஜய் கொடுத்த அட்வைஸ்.. பிரியாணி விருந்துக்கு பின் இதை தான் பேசினாராம்
நடிகர் விஜய் இன்று அவரது ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேசினார். கொரோனா காரணமாக கடந்த சில வருடங்களாக சந்திப்பு நடைபெறாத நிலையில் தற்போது விஜய் சந்திப்பை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.
பிரியாணி விருந்து
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய், அதன் பின் அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.
அட்வைஸ்
அப்போது விஜய் ரசிகர்களுக்கு அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார். "முதலில் குடும்பத்தை பாருங்க, தொழிலை சரியாக கவனிங்க, அதன் பிறகு வருமானத்தில் 1 சதவீதமோ 2 சதவீதமோ ஒதுக்கி மக்கள் நல பணிகளை செய்யுங்கள், அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என விஜய் சொன்னதாக வெளியில் வந்த ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
அடுத்த வருடம் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸ் ஆகும் நிலையில், அது பற்றி எதுவும் விஜய் பேசவில்லை என்றும் கூறி இருக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு ரசிகருடனும் தனித்தனியாக அவர் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.
The Never Ending Craze for this Man..❤️?#ThalapathyVijay? #ThalapathyVijay #Thalapathy67? #ThalapathyVijayMakkalIyakkham #Vijay #VijayFansMeet #cineulagam pic.twitter.com/EMcdPFU0P0
— Cineulagam (@cineulagam) November 20, 2022
சமந்தாவின் யசோதா 9 நாள் வசூல்: படம் வெற்றியா, தோல்வியா?