விஜய் - நெப்போலியன் இடையே வந்த சண்டைக்கு என்ன காரணம் தெரியுமா? போக்கிரி படப்பிடிப்பில் நடந்த விஷயம்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தற்போது அவர் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் அப்படத்துடன் அஜித்தின் 61-வது திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி. பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் விஜய்யுடன் நடிகர் நெப்போலியனும் நடித்திருப்பார்.
அப்படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விஷயத்தினால் நடிகர் நெப்போலியன் விஜய்யிடம் அப்போதில் இருந்து பேசுவதில்லை. அதனை அவரே நிறைய பேட்டிகளில் தெரிவித்திருப்பார்.
சண்டை வர காரணம்
அப்படி அவர்கள் இடையே சண்டை வர காரணமே Caravan தான். ஆம், போக்கிரி ஷூட்டிங்கின் போது நடிகர் நெப்போலியன் அவரின் நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க அவரின் Caravan-க்கு சென்றுள்ளார்.
அப்போது Caravan-ல் இருந்த விஜய்யை சந்திக்க அவரின் உதவியாளர் ஒருவர் அனுமதிக்க மறுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான நெப்போலியன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பின் விஜய் வெளியே வந்து அவரின் உதவியாளருக்கு அதரவாக பேசியது மட்டுமின்றி, நெப்போலியனிடம் கடுமையாக பேசிவிட்டாராம். இதனால் அவர்கள் இருவரும் தற்போதும் பேசி கொள்வதில்லை என சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் விக்ரமின் கோப்ரா இவ்வளவு தான் வசூலா?

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
