கதாநாயகிக்காக காத்திருந்த நடிகர் விஜய் ! தளபதி 66 படம் குறித்த புதிய தகவல்..
தளபதி 66
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின் ஷூடிட்ங் தற்போது ஹைதெராபாத்தில் நடைபெற்று வருகிறது, இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி நேற்று தளபதி விஜய் படப்பிடிப்புகாக ஹைதெராபாத் சென்றிருந்தார், அப்போது அங்குள்ள ஏர்போர்ட்-ல் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
தாமதமாக வந்த கதாநாயகி
இந்நிலையில் தற்போது அப்படத்தின் கதாநாயகி ரஷ்மிகா மந்தனா தளபதி 66 படப்பிடிப்பில் லேட்டாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவர் ஒரே சமயத்தில் நான்கு திரைப்படங்களில் நடிப்பதால் தளபதி 66 படப்பிடிப்புக்கு தாமதமாக நுழைந்துள்ளார்.
இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தான் துவங்குகிறதாம். மேலும் தளபதி விஜய் அங்கு 25 ஆம் தேதி வரை இருக்க போவதாகவும், படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் அவர் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
