பேச ஆரம்பித்த அடுத்த நாளே மனைவியிடம் காதலை சொன்ன விஜய் ஆண்டனி... அவரே சொன்ன விஷயம்
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராக களமிறங்க பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமையை காட்டியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சாதித்தவர் பிச்சைக்காரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகராக காட்டினார்.
நடிக்க தொடங்கி இசை பக்கம் செல்லாதவர் இனி நிறைய படங்கள் இசையமைக்க போகிறேன், இசைக் கச்சேரிகள் கவனம் செலுத்த போகிறேன் என கூறியிருந்தார்.
நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இப்போதெல்லாம் அடிக்கடி கலந்துகொள்கிறார்.
காதல் கதை
விஜய் ஆண்டனி, பாத்திமா என்பவரை கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர், அதில் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அண்மையில் ஒரு பேட்டியில் தனது காதல் கதை குறித்து பேசியுள்ளார் விஜய் ஆண்டனி. அதில் அவர் பேசும்போது, பாத்திமா என்னை விரும்பிய முதல் பெண், நான் நிறைய பேரை காதலித்துள்ளேன். அவர் சன் டிவியில் பேமஸான ஒரு தொகுப்பாளினி.
உச்சி முதல் பாதம் வரை பாடலைப் பார்த்துவிட்டு வாழ்த்த எனக்கு போன் செய்தார். அப்போது 1 மணி நேரம் பேசினேன், அடுத்த நாளே ப்ரொபோஸ் செய்துவிட்டேன் எனகூறியுள்ளார்.