"கை, கால் இல்லாவிட்டாலும் நடிக்கலாம்" - விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனியின் பேச்சு
விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் முதன் முதலில் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக தனது கால் தடம் பதித்தவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் ஆடியோ பொறியாளர் ஆவார்.
"நாக்கு முக்க" விளம்பர படத்திற்காக பிரான்சில் 2009 ஆம் ஆண்டு கேன்ஸ் கோல்டன் லயன் விருது பெற்ற முதல் இந்திய இசை இயக்குனர் இவர் ஆவார். அதன்பின் தான் அந்த பாடல் திரைப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"நான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு தன்னை அடையாளம் காண்பித்தவர். "பிச்சைக்காரன்" படத்தின் மூலமாக மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அப்படம் பெரும் வெற்றி அடைந்து வசூல் சாதனை படைத்தது.
விபத்து
இதனை தொடர்ந்து "பிச்சைக்காரன் 2" படத்திற்காக மக்கள் ஆவலாக காத்திருக்கும் சூழலில் படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனிக்கு பெரும் விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"கல்லுரும் பூவே" எனும் பாடல் படப்பிடிப்பின் போது கடலில் ஜெட்ஸ்கி வண்டி ஓட்டும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அவர் முகம் படகில் மோதி மூக்கு, தாடை அனைத்தும் பலமாக காயப்பட்டிருந்த அவர், தன்னுடைய சுய நினைவை இழந்தார்.
பின்னர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவரின் முகத்தில் 9 பிளேட் வைத்ததாக தெரிவித்தார்.
விஜய் ஆண்டனியின் பேச்சு
அவரின் உடல் குணமாகி படப்பிடிப்பை முடித்த பிறகு அவர் அளித்த பேட்டியில் "தனக்கு நடந்து விபத்து பெரிது என்றும், மேலும் விபத்துக்கு பிறகு அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியதாக கூறினார். இருப்பினும் முகத்தில் மாற்றங்கள் இருந்தாலும், மக்கள் முக்கியத்துவம் கொடுப்பது தன்னுடைய கதைக்குத்தான். மேலும், தான் அதற்கு ஏற்றவாறு கதை தயாரிப்பேன் என கூறி மனிதனுக்கு கை, கால் இல்லாவிட்டாலும் கூட அவனால் படத்தில் நடிக்க முடியும் என்கிறார்".
"தான் வாழ்வில் பல ஏமாற்றங்களை சந்தித்தவன் அதனால் எந்த ஒரு காயமும் தன்னை பெரிதாக காயப்படுத்திவிடாது. விஜய் ஆண்டனி படம் என்றால் முதல் நாள் மட்டும் மக்கள் கூட்டம் வரும், படம் நல்லா இல்லாவிட்டால், பிறகு அடுத்த நாளிலிருந்து கூட்டம் வராது. என் மேல் உள்ள நம்பிக்கையில் முதல் நாள் கூட்டம் வரும், அந்த கூட்டம் தன் படத்தை தீர்மானிக்கும்" என்றார்.
நான் ரஜினிக்கு வில்லனா.. தயங்கிய பிரபல நடிகர், 50 கோடி சம்பளம் பேசிய லைக்கா