இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது எந்த படத்திற்காக தெரியுமா, இதோ
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதன்பின், ,நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், TN 07 AL 4777, ,வேலாயுதம், வேட்டைக்காரன்' என தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்து வந்தார். தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, அதில் பல படங்களில் ஆல்பம் ஹிட் கொடுத்தார்.
இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் ஹீரோவாக களமிறங்கினார். 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி, சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
ரூ. 1 கோடி சம்பளம்
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளராக எந்த திரைப்படத்திற்கு முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினீர்கள் என விஜய் ஆன்டனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'வேலாயுதம் படத்திற்காக தான் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினேன்' என கூறியுள்ளார்.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
