ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தாராளமாக வாங்கிக்கோங்க.. விஜய் ஆண்டனி கொடுத்த அட்வைஸ்
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி மிர்னாலினி நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரோமியோ. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அட்வைஸ்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, "குடும்பங்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையில் ரோமியோ திரைப்படம் அமைந்து இருக்கும். மனைவிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. திருமணத்திற்கு பின் மனைவி - கணவர் இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து படம் அமைந்து இருக்கும்".
மேலும் அவர் பேசுகையில்,, "அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள். வாக்கு படம் கொடுப்பது தவறாக இருந்தாலும் வறுமை, குடும்ப சூழ்நிலை கருதிபணம் வாங்கி கொள்ளலாம். அது உங்களுடைய பணம் தான். பணம் கொடுத்தால் அந்த கட்சிக்கு தான் வாக்களிப்பேன் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்" என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan