விஜய் ஆண்டனியின் மகள் மீரா எப்படிபட்டவள்- வேலை செய்த பெண் பேட்டி
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி பின் நடிகராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி.
கடைசியாக அவரது நடிப்பில் பிச்சைக்காரன் 2 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, வெளிநாட்டில் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு விபத்து ஏற்பட சென்னை அழைத்து வரப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிச்சைக்காரன் 2 படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. சமீபத்தில் விஜய் ஆண்டனி படு மாஸாக இசைக் கச்சேரியையும் நடத்தினார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டார்.
வேலை செய்த பெண்
விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதிச்சடங்கும் நடந்துவிட்டது, அனைவருமே அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி வீட்டில் பணிபுரிந்த பெண் பேசும்போது, மீரா ரொம்பவே நல்ல பெண், தினமும் நான் தான் அவருக்கு சமைத்து கொடுப்பேன்.
அந்த பொண்ணு என்னை தொந்தரவு செய்ய மாட்டா, அவளே வந்து எது வேண்டுடோ எடுத்துக் கொள்வாள். டீயோ காபியோ வேண்டுமென்றால் மட்டும்தான் நம்மிடம் கேட்கும். மற்றபடி எது வேண்டுமானாலும் அதுவே எடுத்துக்கொள்ளும். அவ்வளவு அமைதியான பொண்ணு.
வீட்டில் இருக்கா இல்லையா என்றுகூட தெரியாது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காது. தயிர் சாதம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த செய்தி கேட்டு எனக்கு நெஞ்சே வலிக்கிறது என சோகமாக பேசியுள்ளார்.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
