சிட்டிசன் பட துணை இயக்குனர் விஜய் ஆண்டனி மீது போட்ட வழக்கு
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி கலக்கி வருகிறார். அவர் நடித்த பிச்சைக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.
அந்த படத்தின் ஷூட்டிங்கில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி சிகிச்சை பெற்று தேறி வந்திருக்கிறார்.

கதை திருட்டு வழக்கு
தற்போது அஜித் நடத்த சிட்டிசன் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பரணி என்ற நபர் விஜய் ஆண்டனிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
பிச்சைக்காரன் 2 படத்தின் கதை என்னுடையது என அவர் கூறி இருக்கிறார். பல தயாரிப்பாளர்களிடம் இதற்கு முன் அந்த கதையை கூறிய நிலையில் தற்போது அது பிச்சைக்காரன் 2 என்கிற பெயரில் உருவாகி இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் எனதெரிகிறது .

எனக்கு திருமணமா? முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் ஓப்பனாக சொன்ன பதில்