பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி..
பிச்சைக்காரன் 2
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 கடந்த வாரம் வெளிவந்தது.
இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, தயாரித்து, நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக வசூலில் இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பிச்சைக்காரன் 3
இந்நிலையில், சமீபத்தில் பேசிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 3 உருவாகிறது என்று கூறியுள்ளார். மேலும் பிச்சைக்காரன் 1 மற்றும் 2 படங்களின் தொடர்ச்சியாக இருக்காது.
பிச்சைக்காரன் 3 புதிய கதைக்களம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் 3 2025ல் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படத்திற்கு பிறகு விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா?- ரசிகர்கள் ஷாக்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
