வலிமையை தாண்டுமா பீஸ்ட்!
நெல்சன் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிவிட்டது. வரும் ஏப்ரல் 13ம் தேதி பல மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் ஆக இருக்கிறது.
வலிமை Vs பீஸ்ட்
அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகிவிட்டது, அடுத்து விஜய்யின் பீஸ்ட் வர இருக்கிறது. உடனே ரசிகர்கள் இரு படங்களுக்கான எல்லா விஷயத்தையும் கம்பேர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படி தான் இப்போது விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
வலிமை படம் முதல் நாள் திரையானதை விட பீஸ்ட் படம் திரையிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை 20% குறைவாகவே உள்ளதாம். அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டாவது நாளிலும் வலிமை படத்தை விட பீஸ்ட் திரைப்படம் 30% திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கவலையில் விஜய் ரசிகர்கள்
வலிமை திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 30 கோடி வரை வசூலித்திருந்தது. இந்த வசூலை விஜய்யின் பீஸ்ட் குறைவான திரையரங்குகளின் எண்ணிக்கையில் பெருமா என்பது ரசிகர்களின் கவலையாக உள்ளது.

குறைவான திரையரங்குகளுக்கான காரணம்
வலிமை படம் சோலோவாக ரிலீஸ் ஆகி இருந்தது, அந்த நேரத்தில் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை. ஆனால் பீஸ்ட் பட ரிலீஸ் நேரத்தில் ஏற்கெனவே RRR திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு கன்னட சினிமாவில் செம ஹிட்டடித்த யஷ் நடித்துள்ள KGF Chapter 2 படமும் வெளியாகிறது.
இதனால் தான் பீஸ்ட் படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளன.

பீஸ்ட் படத்தில் இடம்பெறும் மால் செட்டிற்கு பின்னால் இப்படியொரு விஷயமா?- பிரபலமே கூறிய தகவல்