வெளிநாட்டில் விஜய்யின் பீஸ்ட் படம் செய்யும் மாஸான விஷயம்- இத்தனை திரையரங்குகளில் ரிலீஸா?
நெல்சன் திலீப்குமார் ஒரு பெரிய நடிகரின் படத்தை எடுத்து இப்போது சாதனை செய்துவிட்டார். அடுத்த என்ன ரிலீஸ் தான், அவரது படம் சன் பிக்சர்ஸ் கையில் உள்ளது, புரொமோஷனை செம கில்லி போல் செய்துவிடுவார்கள்.
படமும் வரும் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்தை பற்றிய சில முக்கிய தகவல்கள்
இப்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணியளவில் ரிலீஸ் ஆக உள்ளது, அதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். படம் ரிலீஸ் ஆக 12 நாட்களே உள்ள நிலையில் தணிக்கை குழு சான்றிதழும் எப்போதோ வந்துள்ளது.
படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததோடு படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என தெரிய வந்திருக்கிறது.

வெளிநாட்டில் மாஸ்
பட புரொமோஷன் மிகவும் சூடு பிடிக்க வெளிநாட்டில் பீஸ்ட் படம் திரையாக போகும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பிரிட்டனில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் படம் அங்கு இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுதான் முதல்முறையாம்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தலைகீழாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை- ஷாக்கான ரசிகர்கள்