UKவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மாஸ் புக்கிங விவரம்- அடிதூள் கிளப்பும் ரசிகர்கள்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான் ஊரெங்கும் பேச்சு. படம் இதில் சாதனை செய்துவிட்டது, அந்த ஏரியாவில் செம மாஸ் இப்படி தான் பேசப்படுகிறது, அதிலும் சமூக வலைதளத்தில் படம் குறித்து நிறைய பேச்சு இருக்கிறது.
குவைத் மற்றும் மலேசியா பிரச்சனை
படத்தின் டீஸர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகி இருந்தது. டீஸர் வெளிவந்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள் இருந்தனர், இப்போதும் டீஸரை பற்றி பேசுகிறார்கள்.
இந்த நேரத்தில் தான் குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிட மறுத்துள்ளனர். காரணம் படத்தில் தீவிரவாதத்தை பற்றி பேசுவதாக இருப்பதால் படத்தை திரையிட மறுத்துள்ளனர்.
இவர்களை போல மலேசியாவிலும் படத்தை திரையிட தடை வரலாம் என பேச்சு வருகிறது, இதனால் கொஞ்சம் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார். இப்போது கவலையில் உள்ள ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியும் வந்துள்ளது.

UK புக்கிங்
அங்கு புக்கிங்கில் விஜய்யின் பீஸ்ட் படம் பெரிய சாதனை படைத்து வருகிறது. முதல் நாள் புக்கிங்கில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு 152 ஷோக்கள் விற்றுள்ளதாம்.
அன்று வெளியாக இருக்கும் KGF படத்திற்கு வெறும் 61 ஷோக்கள் மட்டுமே புக் செய்யப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்திற்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

குவைத்தை தொடர்ந்து இன்னொரு முக்கிய இடத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடையா?- ரசிகர்கள் ஷாக்