விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இத்தனை கோடி வசூலித்தால் தான் ஹிட்டா?
தமிழ் சினிமாவில் அஜித்தின் வலிமை படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் இப்போது ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. அடுத்து தமிழ் மக்கள் கொண்டாட காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.
பீஸ்ட் பட தகவல்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கும் 3வது படம் விஜய்யின் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி பிரம்மாண்டமாக பல மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷனையும் சன் பிக்சர்ஸ் பக்காவாக செய்து வருகிறார்கள்.
பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் டீஸர் வெளியான நிலையில் வரும் ஏப்ரல் 2 அதாவது நாளை மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. வீரா ராகவனாக விஜய் பீஸ்ட் படத்தில் என்ன கலக்க இருக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வசூல் விவரம்
பீஸ்ட் படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. USAவில் விஜய்யின் பீஸ்ட் எவ்வளவு வசூலித்தால் சாதனை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது படம் அங்கு 1.5 மில்லியன் வசூலித்தால் தான் வெற்றி படமாக அமையுமாம்.

அட்டை படத்திற்காக ஆடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை சமந்தா- ஷாக் ஆன ரசிகர்கள்